திரிபுராவில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் காங்கிரசின் சின்னத்தை மறைத்தவர் கைது


திரிபுராவில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் காங்கிரசின் சின்னத்தை மறைத்தவர் கைது
x

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கிராமத்தை சேர்ந்த மைனுல் ஹேக் என்பவர் இச்செயலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அகர்தலா,

திரிபுரா சட்டசபை தேர்தல் கடந்த 16-ந் தேதி நடந்தது. அப்போது, உனகோடி மாவட்டம் ஸ்ரீநாத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பிரஜித் சின்காவின் புகைப்படமும், அக்கட்சியின் கை சின்னமும் கருப்பு நிற 'டேப்' ஒட்டி மறைக்கப்பட்டு இருந்தது.

இதை ஒரு வாக்காளர் சுட்டிக்காட்டியவுடன், அந்த எந்திரத்துக்கு தேர்தல் அதிகாரிகள் 'சீல்' வைத்து மாற்று எந்திரத்தை கொண்டு வந்து வைத்தனர். அதற்கு முன்பே 300 ஓட்டுகள் போடப்பட்டு இருந்தன.

விசாரணையில், அந்த கிராமத்தை சேர்ந்த மைனுல் ஹேக் என்பவர் இச்செயலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story