உத்தர பிரதேசம்; வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய நபர் கைது


உத்தர பிரதேசம்; வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய நபர் கைது
x

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டு கொடியை தனது வீட்டில் ஏற்றினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. 75-வது சுதந்திர தினம் என்பதால் ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.

ஹர்கர் திரங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஆகஸ்டு 13-ந்தேதி முதல் வரும் 15-ந்தேதி (நாளை) வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது. இதைப் பின்பற்றி, நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் பல இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இல்லங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளனர்.

இந்நிலையில் தான் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ஒருவர் பாகிஸ்தான் தேசியக்கொடியை வீட்டில் ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றினர். இதுதொடர்பாக சல்மான் (வயது 21), உறவுக்கார பெண் ஷானாஸ் (22) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றியதாக சல்மானை போலீசார் கைது செய்தனர்.


Next Story