மதுகுடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்


மதுகுடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்
x

மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியை சேர்ந்த மொய்னுதின் அன்சாரி (வயது 42). இவரது மனைவி பர்வீன் (26). மொய்னுதினுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மதுகுடிக்க பணம் கேட்டு மனைவி பர்வீனுக்கு அன்சாரி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மதுகுடிக்க பணம் தரும்படி மனைவியிடம் அன்சாரி மீண்டும் தகராறு செய்துள்ளார். மதுகுடிக்க பர்வீன் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அன்சாரி மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். கணவன் தாக்கியதில் படுகாயமடைந்த பர்வீனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், பர்வீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை கொன்றுவிட்டு தப்பியோடிய அன்சாரியை பெரிவாலி ரெயில் நிலையம் அருகே கைது செய்தனர்.


Next Story