சாலையில் சென்ற பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய ஆம்புலன்ஸ் - ஒருவர் பலி


சாலையில் சென்ற பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய ஆம்புலன்ஸ் - ஒருவர் பலி
x

விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் சாலை தடுப்பில் மோதியது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தது.

நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுகொண்டிருந்த 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் ஆம்புலன்ஸ் அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் 2 பைக்கில் சென்ற 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பைக்கில் தனது சகோதரனுடன் பயணம் செய்த ஆயூஷ் வர்மா என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றொரு பைக்கில் பயணித்த கணவன் - மனைவியும் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story