கேரளாவில் வந்தே பாரத் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை-போலீசார் விசாரணை


கேரளாவில்  வந்தே பாரத் ரெயில் முன் பாய்ந்து ஒருவர்  தற்கொலை-போலீசார் விசாரணை
x

கோழிக்கோடு அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த நபர்யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களைபோலீசார் சேகரித்து வரு கின்றனர்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் வந்தே பரரத் எக்ஸ்பிரஸ் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. மாலை யில் கோழிக்கோட்டை அடுத்தஎலத்தூர் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது.அப்போது தண்டவாளத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர்திடீரென வேகமாக வந்து கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தார். இதில்கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் உடல் சிதறிசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அறிந்த கோழிக்கோடு ரயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான ஆசாமியின் உடலை மீட்டனர்.

அந்த ஆசாமி ரயிலில்பாய்ந்ததால் வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. அந்த ரெயில் திருவனந்தபுரத்திற்குசென்ற பின்னர் ரயிலின்முன்பகுதி சரி செய்யப்பட்டது. இதற்கிடையே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீசார்வழக்கு பதிவு செய்து அந்தநபர் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.நேற்று வழக்கம் போல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சென்றது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன்மீது கல்வீச்சுசம்பவங்கள் அரங்கேறிவந்த நிலையில், தற்போதுகேரளாவில் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story