பிறந்தநாள் கேக் வெட்டி, பாடலுக்கு நடுரோட்டில் ஆட்டம் போட்ட பெண்கள் - வைரல் வீடியோ


பிறந்தநாள் கேக் வெட்டி, பாடலுக்கு நடுரோட்டில் ஆட்டம் போட்ட பெண்கள் - வைரல் வீடியோ
x

2 பெண்கள், ஒரு ஆண் நடுரோட்டில் பாடலுக்கு ஆடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் கவ்ஷம்பி நகரை சேர்ந்தவர் விஷால் ஸ்ரீவஸ்தவா. இவரது மனைவிக்கு நேற்று பிறந்தநாள். இதையடுத்து, மனைவியின் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய விஷால் தனது காரில் மனைவி, அவரது பெண் தோழியை அழைத்துக்கொண்டு ராஜாநகர் சாலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு நடுரோட்டில் காரை நிறுத்திய விஷால் தனது மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், காரில் அதிக சத்தத்துடன் பாடல் போட்டு 3 பேரும் நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளனர்.

விஷாலின் மனைவியும், அவரது தோழியும் நடுரோட்டில் ஆட்டம்போட்ட அதை விஷால் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சாலை விதிகளை மீறி நடுரோட்டில் காரை நிறுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஷாலை கைது செய்த போலீசார் அவரின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.




Next Story