உள்துறை அமைச்சக கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர்
உள்துறை அமைச்சக கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் அருகே மத்திய செயலாளர் அலுவலகம் உள்ளது. அந்த பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நார்த் பிளாக் பகுதி வழியாக நேற்று இரவு ஒரு நபர் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஆகாஷ் குமார் சின்ஹா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற சின்ஹாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story