டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் பலி


டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் பலி
x

கோப்புப்படம்

டெல்லியில் உள்ள கைலாஷ் காலனி ஸ்டேஷனில் நேற்று மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள கைலாஷ் காலனி ஸ்டேஷனில் நேற்று மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலியானவர், கிழக்கு கைலாஷில் வசித்து வந்த அஜய் அர்ஜுன் ஷர்மா என தெரியவந்துள்ளது.

இளைஞரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.

இதனால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில்கள் பின்னர் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story