பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபர்... துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்


பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபர்... துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்
x

கோப்புப்படம் 

கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியின் நந்த் நாக்ரி பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற நிலையில், காவல்துறையினரின் துரித நடவடிக்கையின் காரணமாக அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தங்களுக்கு நேற்று இரவு 9.06 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், இரவு 9.09 மணியளவில் ஒரு குழு பாதிக்கப்பட்டவரின் வீட்டை சென்றடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்யமுயன்ற இளைஞரின் வீட்டை அடைந்ததும், அவர் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார். கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

அந்த இளைஞர், தற்கொலை செய்துகொள்வதற்காக 40க்கும் மேற்பட்ட ஒருவகை மாத்திரைகளை உட்கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story