திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் - அதிர்ச்சி சம்பவம்


திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 7 July 2022 2:33 AM IST (Updated: 7 July 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சண்டிகர்,

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் நேற்று கூறியதாவது;

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 25ம் தேதி காலை 9 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக மனிசர் என்ற பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அப்பெண்ணை அபே சர்மா என்ற இளைஞர் பின் தொடர்ந்து பைக்கில் வந்துள்ளார். அந்த பெண்ணை இடைமறித்த சர்மா தன்னிடம் பேசும்படியும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், அந்த இளம்பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சர்மா தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அப்பெண்ணை சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் படுகாயமடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோடிய சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்து வந்தது.

தீவிர தேடுதலுக்கு பின் சர்மா கடந்த 2-ம் தேதி கைது செய்யபப்ட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சர்மாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story