மகாபாரதம், ராமாயணம் தொடர்களை விட, பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது - திரிபுரா முதல்-மந்திரி


மகாபாரதம், ராமாயணம் தொடர்களை விட, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது  - திரிபுரா முதல்-மந்திரி
x

பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியைக் கேட்க நம் தாய்மார்களும் சகோதரிகளும் விரைந்து செல்வதைப் பார்க்கிறோம்.

அகர்தலா,

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 108-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.

இந்தநிலையில், கட்சித் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன், தனது இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் 108வது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்த முதல்-மந்திரி மாணிக் சாஹா கூறுகையில்,

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூர்தர்ஷனில் 'மகாபாரதம்' மற்றும் 'ராமாயணம்' இதிகாசங்களின் அத்தியாயங்களைப் பார்க்க எங்கள் தாய்மார்களும் சகோதரிகளும் டிவி திரையை நோக்கி விரைவதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போதெல்லாம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று வந்தாலே பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியைக் கேட்க நம் தாய்மார்களும் சகோதரிகளும் விரைந்து செல்வதைப் பார்க்கிறோம். 'மன் கி பாத்' நிகழ்ச்சி 1980 களின் தொடர்களை விட மிகவும் பிரபலமாகி விட்டது என்று அவர் கூறினார்.

மகாபாரதம் (1988), ராமாயணம் (1987) ஆகிய இதிகாசங்கள், தொலைக்காட்சித் தொடர்களாக எடுக்கப்பட்டு தூர்தர்ஷன் சேனலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story