மராட்டியம்; 1-ந்தேதியில் இருந்து ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு 143 பேர் பலி


மராட்டியம்; 1-ந்தேதியில் இருந்து ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு 143 பேர் பலி
x

மராட்டியத்தில், ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு நேற்று வரை 250 நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாக்பூர்,

மராட்டியத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மராட்டிய பொது சுகாதார துறை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்தியில், மொத்தம் 12,917 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில், புதிய ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு எதுவும் நோயாளிகளிடம் கண்டறியப்படவில்லை.

குணமடைந்தோர் விகிதம் மராட்டியத்தில் 98.17 சதவீதம் என்ற அளவிலும், உயிரிழப்பு விகிதம் 1.81 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு நேற்று வரை 250 நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மராட்டியத்தில், கடந்த 1-ந்தேதியில் இருந்து 143 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதில், 71.33 சதவீத மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், உயிரிழந்தவர்களில் 85 சதவீதத்தினருக்கு இணை நோய்களும், 15 சதவீதத்தினருக்கு எந்த நோய்களும் இல்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story