மராட்டியம்: 25 பேரை பலி கொண்ட பஸ் தீ விபத்து பகுதியில் 6 மாதங்களில் 88 பேர் பலி


மராட்டியம்:  25 பேரை பலி கொண்ட பஸ் தீ விபத்து பகுதியில் 6 மாதங்களில் 88 பேர் பலி
x

மராட்டியத்தில் 25 பேரை பலி கொண்ட பஸ் தீ விபத்து நடந்த பகுதியில் 6 மாதங்களில் 88 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தின் நாக்பூர் மற்றும் மும்பையை இணைக்க கூடிய சம்ருத்தி விரைவு சாலையானது கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு திறக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

எனினும், நேற்று (சனிக்கிழமை) பஸ் ஒன்று இந்த பகுதியில் தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். புல்தானா மாவட்டத்தின் சாலை பிரிப்பானில் மோதி தனியார் பஸ் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதனுடன் சேர்த்து, மொத்தம் 39 விபத்துகள் இப்பகுதியில் நடந்து உள்ளன.

இந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, சிறிய மற்றும் பெரிய அளவிலான 616 விபத்துகள் நடந்து உள்ளன. இதில், 656 பேர் சிறிய மற்றும் பெரிய அளவில் காயம் அடைந்து உள்ளனர்.

அதிவிரைவாக செல்வது, வாகனம் ஓட்டும்போது உறங்கி விடுவது, வாகனத்தின் சக்கரம் வெடித்து விடுவது போன்ற காரணங்களால் பல விபத்துகள் நடக்கின்றன.

இதனை சரி செய்ய நெடுஞ்சாலை போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். மராட்டியத்தில் 2022-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,224 பேர் உயிரிழந்து உள்ளனர்.


Next Story