மராட்டியம்: பூச்சி கொல்லி மருந்து உட்கொண்ட சகோதர, சகோதரி அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்


மராட்டியம்:  பூச்சி கொல்லி மருந்து உட்கொண்ட சகோதர, சகோதரி அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்
x

மராட்டியத்தில் பூச்சி கொல்லி மருந்து என தெரியாமல் உட்கொண்ட சகோதர, சகோதரி அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.



புனே,


மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் ஷ்லோக் அரவிந்த் மாலி (வயது 3). இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (வயது 7).

இந்நிலையில், திடீரென சிறுவனுக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. சிறுவனை கரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவனது பெற்றோர் சேர்த்து உள்ளனர்.

இதில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்து உள்ளான். சிறிது நேரத்தில் தனிஷ்காவுக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது. வாந்தியும் ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் பலனின்றி சிறுமி உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றிய பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவனுக்கு அதிக ரத்த போக்கு மற்றும் நீரிழப்பு ஆகியவை உயிரிழப்பு ஏற்பட காரணம் என தெரிய வந்து உள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.

வீட்டில் தானிய கிடங்கில் இருந்து பூச்சி கொல்லி பொடியை அவர்கள் எடுத்து உட்கொண்டு இருக்க கூடும் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

எனினும், உண்மையான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாக்பூரில் சக்ரதாரா பகுதியில் வீடு ஒன்றில், கொசு ஒழிப்பு திரவ மருந்து உட்கொண்ட ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவமும் நேற்று நடந்து உள்ளது.


Next Story