145 மராட்டிய பஸ்களை பத்திரமாக அனுப்பி வைத்த பெலகாவி போலீசார்


145 மராட்டிய பஸ்களை பத்திரமாக அனுப்பி வைத்த பெலகாவி போலீசார்
x

சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு பக்தர்களை அழைத்து வந்த 145 மராட்டிய பஸ்களை பத்திரமாக பெலகாவி போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெலகாவி:

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவியை மையமாக வைத்து நடந்து வரும் எல்லை பிரச்சினை தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்து உள்ளது. மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கர்நாடகத்தில் இருந்து மராட்டியத்திற்கு கர்நாடக அரசு பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 145 மராட்டிய மாநில அரசு பஸ்கள் பக்தர்களை ஏற்றி கொண்டு பெலகாவி மாவட்டம் சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு வந்தன. அந்த பஸ்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து பெலகாவி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பக்தர்களுடன் புறப்பட்ட 145 பஸ்களையும், போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று எல்லையில் விட்டு வந்தனர். பெலகாவி போலீசாரின் இந்த செயலை மராட்டிய போக்குவரத்து கழக அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.


Next Story