திருமணமானதை மறைத்து காதல்: காதல் ஜோடிகள் தற்கொலை


திருமணமானதை மறைத்து காதல்: காதல் ஜோடிகள் தற்கொலை
x

குருபிரசாத் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், அவர் திருமணமானதை மறைத்து, பவித்ராவை காதலித்து வந்து உள்ளார்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளி தாலுக்கா விஜயபுரா நகரில் கோலாரைச் சேர்ந்த பவித்ரா என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். உர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்த குருபிரசாத் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் நட்பு காதலாக மாறியது.

குருபிரசாத் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், அவர் திருமணமானதை மறைத்து, பவித்ராவை காதலித்து வந்து உள்ளார்.

குருபிரசாத்தின் திருமணம் விவகாரம் வெளியில் தெரிய வந்ததும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் பவித்ராவுக்கு போன் வராததால், அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

விஷயம் அறிந்ததும் விஜயப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பவித்ரா தற்கொலை செய்துகொண்டதை அறிந்த குருபிரசாதும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இறந்த குருபிரசாத் மற்றும் இறந்த பவித்ரா இருவரும் கோலாரை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து விஜயப்பூர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story