டெல்லியில் பலரை சந்திப்பதால் தேசிய அளவில் பிரபலம் அடைய முடியாது: பிரசாந்த் கிஷோர் பேச்சு


டெல்லியில் பலரை சந்திப்பதால் தேசிய அளவில் பிரபலம் அடைய முடியாது:  பிரசாந்த் கிஷோர் பேச்சு
x

டெல்லியில் பலரை சந்திப்பதால், ஒருவரது நிலை தேசிய அளவில் வளருகிறது என்று பொருள் கிடையாது என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருகிறார். இதில், முன்னாள் முதல்-மந்திரிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களின் சந்திப்பில் இன்று பேசும்போது, பீகாரின் அரசியல் வளர்ச்சிகள் மாநில அளவில் மட்டுமே இருக்கும். அது தேசிய அரசியலை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை.

ஒருவர் டெல்லிக்கு சென்று பலரை சந்திக்கிறார் என்றால், அவரது நிலை தேசய அளவில் வளர்ந்து வருகிறது என்று அர்த்தம் இல்லை. மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகர ராவ் கூட டெல்லியில் பலரை சந்தித்து இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதில் என்ன புதுமை உள்ளது. எதிர்க்கட்சிகள் சில புதிய விசயங்களை செய்யவுள்ளனர் என நாம் எப்படி எண்ணுவது? 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரிய மாற்றம் கொண்டு வரப்படும் என நான் நினைக்கவில்லை என்று கிஷோர் கூறியுள்ளார்.


Next Story