மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம் 

மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க முடிவெடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் இன்று நாளை விசாரணைக்கு வர உள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் கூட்டத்தில் இன்று விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மத்திய நீர்வளத்துறை மாந்திரியை சந்தித்து இன்று முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் மீறி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதித்தால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story