மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் கான்ராட் சங்மா


மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்  கான்ராட் சங்மா
x

மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் முத்ல-மந்திரி கான்ராட் சங்மா

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்திபோடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலை என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியே சந்தித்தன. இந்தத் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு 59 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்ததால் தனிப்பெரும்பான்மை பெற 30 இடங்கள் தேவை.ஆனால், இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போலவே எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், மேகாலயத்தில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை உள்ளதாக அக்கட்சியின் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா,

பாஜக எங்களுக்கு முழு ஆதரவைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதனால் ஆளுநர் பாகு சௌஹானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தோம். பாஜக மற்றும் மற்ற கட்சிச ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.


Next Story