மாநில அரசு வரியை உயர்த்தியது மேகாலயாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


மாநில அரசு வரியை உயர்த்தியது மேகாலயாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x

மேகாலயாவில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

ஷில்லாங்,

மாநிலத்தில் பெட்ரோலுக்கான வரி லிட்டர் ஒன்றுக்கு 13.5 சதவீதம் அல்லது ரூ.11 ஆகியவற்றில் எது அதிகமோ, அதுவே வரியாக விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 13.5 சதவீதம் அல்லது ரூ.12 ஆகியவற்றில் எது அதிகமோ அதுவே வரியாக மாற்றியமைக்கப்படுகிறது.

இதைப்போல டீசல் விலையும் லிட்டருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.4, இதில் எது அதிகமோ அதுவே வரியாக விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 சதவீதம் அல்லது ரூ.5.50 இதில் எது அதிகமோ அதுவே வரியாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய விலைப்படி பிர்னிகாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.1 ஆகவும், ஷில்லாங்கில் ரூ.96.83 ஆகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலையும் முறையே ரூ.83.5, ரூ.84.72 ஆக அதிகரித்து உள்ளது.

1 More update

Next Story