தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீர்குலைக்கிறது; மெகபூபா முப்தி


தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீர்குலைக்கிறது; மெகபூபா முப்தி
x

நாட்டின் சுதந்திரமான அமைப்பு எனப் பெருமை உடைய தோ்தல் ஆணையம், சுதந்திரம் இல்லாத அளவுக்குப் பாஜகவால் சீா்குலைக்கப்பட்டுள்ளது என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீா்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கிராம் பகுதியில் செய்தியாளா்கள் சந்தித்த மெகபூபா முப்தி கூறியதாவது;

தோ்தல் ஆணையம் பாஜகவின் பிரிவாக மாறியுள்ளது. நாட்டின் சுதந்திரமான அமைப்பு எனப் பெருமை உடைய தோ்தல் ஆணையம், சுதந்திரம் இல்லாத அளவுக்குப் பாஜகவால் சீா்குலைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாஜக சட்டத்தை மீறினாலும், தோ்தல் ஆணையம் அக்கட்சி மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் ஒப்புதல் பெற்ற பிறகே தோ்தல் நடைபெறும் ஆணையம் தோ்தல் தேதி அறிவிக்கும். பாஜகவினா் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தோ்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அவர்களுடைய ஒரே விருப்பம்" என்றார்.


Next Story