காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தொழிலாளி பலி...!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தொழிலாளி பலியாகினார்.
ஜம்மு,
சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் காஷ்மீரில் ரஜவுரி, பூஞ்ச், பந்திப்போரா ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிகபட்ச உஷார்நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சோத்னாரா சும்பல் என்ற இடத்தில் நள்ளிரவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை உயிரிழந்தார் என்று காஷ்மீர் மண்டல காவல்துறை இன்று காலை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த தொழிலாளி பீகாரின் மாதேபுராவைச் சேர்ந்த முகமது அம்ரேஸ் என அடையாளம் காணப்பட்டார்.