சீனாவில் நடப்பது என்ன..? ஜி ஜின்பிங் எங்கே சென்றார்...! இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராதது ஏன்...?


சீனாவில் நடப்பது என்ன..? ஜி ஜின்பிங் எங்கே சென்றார்...! இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராதது ஏன்...?
x

AFP

தினத்தந்தி 27 Sep 2022 5:33 AM GMT (Updated: 27 Sep 2022 7:11 AM GMT)

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே விரிசல் இருப்பதாகவும் சீனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி

சீன ஆட்சிக்கவிழ்ப்பு வதந்திகள் மற்றும் ஜி ஜின்பிங்கின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில் வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஏன் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே விரிசல் இருப்பதாகவும் சீனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஜி ஜின்பிங்கிற்குப் பிறகு மூத்த ராணுவத் தளபதி லி கியாமிங் விரைவில் நாட்டின் அதிபராக வரலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அத்தகைய வதந்திகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை

9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஆட்சிக் கவிழ்ப்பு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சீனாவை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்றும், மூத்த ராணுவத் தளபதி லி கியோமிங் அதிபராகலாம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது குறித்த தகவல்களை சீன தரப்பில் இருந்து இதுவரை மறுக்கவில்லை.

மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் - சீனாவின் வெளிவிவகாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இந்த வதந்திகள் குறித்து அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் வரவில்லை? என்று தான்.


Next Story