கேரளா, கர்நாடகத்தில் பால் விலை உயர்வு


கேரளா, கர்நாடகத்தில் பால் விலை உயர்வு
x

கேரளா, கர்நாடகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் அரசு பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படுகிறது. அந்த மாநில அரசு பால் நிறுவனமான 'மில்மா'வால் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

கர்நாடகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கர்நாடக பால் கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

கர்நாடகத்தில் ஏற்கனவே 6 மாதங்களில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பால் விலையை உயர்த்தி இருப்பது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனிடையே ஆந்திராவில் விஜயா பால் லிட்டர் ரூ.55, தமிழ்நாட்டில் ஆவின் விலை ரூ.40, மராட்டியத்தில் அமுல் ரூ.51, டெல்லியில் மதர் டெய்ரி விலை ரூ.51, குஜராத் அமுல் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story