டெல்லியில் அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
டெல்லி சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்துக்கு சென்றார்.
அங்கு அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்.
Related Tags :
Next Story