ஜம்மு காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலர்கள் திட்டத்தை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!
ஜம்மு காஷ்மீருக்கான கிராம பாதுகாப்புக் காவலர்கள் திட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கான கிராம பாதுகாப்புக் காவலர்கள் திட்டத்திற்கு (வி டி ஜி எஸ் – 2022) மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கிராம பாதுகாப்பு குழுக்களை (விடிஜி) அமைக்க உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கிராம பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள், கிராம பாதுகாப்பு காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் 'இன்றியமையாத' ராணுவ உடை அணியாத வீரர்களாக இருப்பார்கள்.
இந்நிலையில், இந்த குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.4500 வரை ஊதியமாக கிடைக்கும். அதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு மாதம் தலா ரூ.4000 ஊதியம் அளிக்கப்படும்.
Related Tags :
Next Story