பள்ளத்தாக்கில் கவிழவிருந்த பஸ் - நூலிழையில் பெரும் விபத்து தவிர்ப்பு - பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஒற்றை மரம்


பள்ளத்தாக்கில் கவிழவிருந்த பஸ் - நூலிழையில் பெரும் விபத்து தவிர்ப்பு - பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஒற்றை மரம்
x
தினத்தந்தி 14 May 2023 12:44 PM IST (Updated: 14 May 2023 12:49 PM IST)
t-max-icont-min-icon

மலைப்பாங்கான பகுதியில் அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.

திருவனந்தபுரம்,

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. கோழிக்கோடு அருகே மலைப்பாங்கான சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகிய பஸ் மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழவிருந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி பஸ் மிகவும் ஆபத்தான நிலையில் நின்றது.

உடனடியாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மலைப்பகுதியில் உள்ள சாலையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழவிருந்தது. அப்போது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பஸ் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story