மிசோரம், சத்தீஷ்கர் முதல் கட்ட தேர்தல் -அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது


மிசோரம், சத்தீஷ்கர் முதல் கட்ட தேர்தல் -அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது
x

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ராய்பூர்,

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதேசமயம் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

மிசோரத்துக்கு நேரடியாக செல்லாமல் விடியோ மட்டும் வெளியிட்டு பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தெரிவித்திருந்தார்.


Next Story