மும்பை லீலாவதி ஆஸ்பத்திரியில் ராஜ்தாக்கரே அனுமதி


மும்பை லீலாவதி ஆஸ்பத்திரியில் ராஜ்தாக்கரே அனுமதி
x

வருகிற 5-ந்தேதி ராஜ்தாக்கரே அயோத்தி பயணம் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் இடுப்பு மற்றும் முழுங்காலில் பாதிப்பு ஏற்பட்டது.

மும்பை,

நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே (வயது53) சமீபத்தில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை கண்டித்து அவுரங்காபாத், புனே போன்ற நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். மேலும் வருகிற 5-ந்தேதி அயோத்தி பயணம் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் இடுப்பு மற்றும் முழுங்காலில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அயோத்தி சுற்று பயணத்தை ரத்து செய்தார். இதற்கான சிகிச்சை மேற்கொள்ள நேற்று லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நாளை (புதன்கிழமை) அதற்கான அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும், இதன்பின்னர் சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அயோத்தி சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்யப்படும் என கட்சி பிரமுகர் நிதின் சர்தேசாய் தெரிவித்து உள்ளார்.


Next Story