அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தானே சம்பளம் கொடுப்பதுபோல் மோடி நடந்து கொள்கிறார்காங்கிரஸ் கிண்டல்

அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தானே சம்பளம் கொடுப்பதுபோல் மோடி நடந்து கொள்கிறார்காங்கிரஸ் கிண்டல்
x
தினத்தந்தி 16 May 2023 9:15 PM GMT (Updated: 16 May 2023 9:16 PM GMT)

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களின் கனவுகளை தகர்த்து விட்டார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி 'வேலைவாய்ப்பு திருவிழா' நடத்தியதை கிண்டல் செய்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் அரசு நிர்வாகத்தை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்தாக பிரதமர் மோடி மாற்றி விட்டார். நிர்வாகத்தை கீழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

இந்த வேலைவாய்ப்புகளை அவரே உருவாக்கியது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவரே சம்பளம் கொடுப்பது போலவும், தேர்வு செய்யப்பட்டவர்கள் தனக்கு மட்டுமே நன்றிக்கடன்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும் என்பது போலவும் அவர் நடந்து கொள்கிறார்.

ஆனால், அரசு மற்றும் தனியார் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை அழித்தவரே பிரதமர் மோடிதான் என்பதை வேலை தேடும் இளைஞர்கள் அறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களின் கனவுகளை தகர்த்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story