'ஆகஸ்ட் மாதத்தில் மோடி அரசு கவிழ்ந்துவிடும்' - லாலு பிரசாத் யாதவ்


ஆகஸ்ட் மாதத்தில் மோடி அரசு கவிழ்ந்துவிடும் - லாலு பிரசாத் யாதவ்
x

மோடி அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்துவிடும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இன்று கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடு குறித்து மறுஆய்வு செய்தோம். நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டிருப்பதால், கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையதாகும். எம்.எல்.ஏ. வேட்பாளர்களை மாற்றுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன்.

அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே கட்சி தொண்டர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஆட்சி அமைத்திருக்கும் மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்துவிடும்."

இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

1 More update

Next Story