கன்னட சிறுமிக்கு, பிரதமர் மோடி பாராட்டு


கன்னட சிறுமிக்கு, பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:46 PM GMT)

கன்னட சிறுமியை பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார்.

பெங்களூரு:

கன்னட சிறுமியின் பியானோ வாசிப்பிற்கு, பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கர்நாடகத்தை சேர்ந்த சல்மலி என்ற சிறுமி, தனது வீட்டில் உள்ள பியானோ இசைக்கருவியை கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமியின் தாய் கன்னட பாடலான கோகிலா சங்கீதாவை ஒவ்வொரு வரியாக பாடினார். அதனை தொடர்ந்து அந்த சிறுமி, தாய் கூறிய பாடல் வரிகளை பியானோவில் இசையாக வெளிப்படுத்தினாள். இதை, சிறுமியின் தாய் வீடியோ எடுத்தார்.

அந்த வீடியோவை ஆனந்த் குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், சிறுமி பியானோ இசைக்கும் வீடியோவை பிரதமர் மோடி கண்டு, மெய்சிலிர்த்து போனார். அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 'சல்மலிக்கு எனது வாழ்த்துகள். சிறுமியின் இந்த இசை அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுமியின் தனித்திறமைக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Next Story