புலி குட்டிகளுக்கு பால் புகட்டி தாயன்பை வெளிப்படுத்திய குரங்கு... வைரலாகும் வீடியோ


புலி குட்டிகளுக்கு பால் புகட்டி தாயன்பை வெளிப்படுத்திய குரங்கு... வைரலாகும் வீடியோ
x

புலி குட்டிகளுக்கு தாய் குரங்கு பால் புகட்டி, தனது அன்பை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.



புதுடெல்லி,



அன்னையின் அன்புக்கு ஈடில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக, வேறு இன விலங்குக்கும் உராங்குட்டான் வகை குரங்கு ஒன்று பால் புகட்டி தனது தாய்மை உணர்வை வெளிப்படுத்திய பாசக்காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தாய் குரங்கு 3 புலிக்குட்டிகள் சூழ மரத்தின் அடியில் அமர்ந்து உள்ளது. அவற்றில் வெள்ளை நிற புலிக்குட்டி ஒன்றும் உள்ளது. புலிக்குட்டிகளில் ஒன்று குரங்கை பாசத்துடன் பார்த்து நெருங்குகிறது. அதனை தாய் குரங்கு தூக்கி தலை மீது கொண்டு சென்று விளையாட்டு காட்டுகிறது.

புலிக்குட்டியும், தாய் குரங்குக்கு முத்தம் கொடுத்து தனது மிகுதியான அன்பை வெளிப்படுத்துகிறது. பின்னர் புலிக்குட்டியுடன் குரங்கு நேசத்துடன் விளையாடுகிறது. அந்த வீடியோவில் புலிக்குட்டிக்கு தாய் குரங்கு புட்டி பால் கொடுக்கிறது.

அதனை தொடர்ந்து, புலிக்குட்டியை குரங்கு அரவணைத்து கொள்கிறது. கூடவே வந்த வெள்ளை புலிக்குட்டியையும் தூக்கி கொள்கிறது. இரு குட்டிகளையும் இரு கைகளால் தூக்கி வைத்து கொஞ்சும் காட்சிகள் அடங்கிய வீடியோ நெட்டிசன்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

அதில் ஒருவர், அன்னையின் அன்பு இயற்கையானது. அது இனங்களை வேறுப்படுத்தி பார்ப்பதில்லை என தெரிவித்து உள்ளார். மற்றொருவர், தாயன்பு உன்னதம் வாய்ந்தது. ஒவ்வொன்றையும் ஆள்கிறது என்றும் வேறொருவர், மனம் வருடும் வீடியோ என்றும் பதிவிட்டு உள்ளனர்.

இந்த வீடியோவுக்கு ஒருவர், காட்சிகள் அழகாக உள்ளன. நாமும் பிறரை அதுபோன்று நடத்தும்போது தான் மனிதர்களாக இருப்போம் என தெரிவித்து உள்ளார். வீடியோவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்து உள்ளனர். 20 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.




Next Story