கூட்டம் கூட்டமாக உயிரிழந்த குரங்குகள்... மர்ம மரணம் எப்படி? அதிர்ச்சியில் மக்கள்
ஆந்திராவில் 40 குரங்குகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாகுளம்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் பகுதியில் அடர்ந்த புதருக்குள் இறந்த நிலையில் 40 குரங்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் குரங்குகள் மயங்கிய நிலையில் இருந்த போது, குரங்கை பாதுகாக்கும் நோக்கில் அங்குள்ள மக்கள் சிலர் குரங்குகளுக்கு உணவு அளித்துள்ளனர்.
ஆனால், குரங்குகள் உண்ணும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்த மக்களால் குரங்குகளை காப்பாற்ற முடியவில்லை. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குரங்குகளின் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், விசாரணையில் யாரோ ஒரு தரப்பினர் டிராக்டரில் குரங்குகளை கொண்டு வந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தை வழக்குபதிவு செய்த போலீசார், மருத்துவமனையிலிருந்து 5 நாட்களில் அறிக்கை வந்து விடும் எனவும், அதுவரை விசாரணை தொடரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.