நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்தி வைப்பு
இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், மக்களவையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 4வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன.
இதன்படி, இன்று காலை இரு அவைகளிலும் நடவடிக்கைகள் தொடங்கின. இதில், மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், மக்களவையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால், மாநிலங்களவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
மணிப்பூர் விவகாரத்தில் 4-வது நாளாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகளின் 'இந்தியா'கூட்டணி முடக்கி வருகிறது.
Related Tags :
Next Story