மத்திய பட்ஜெட்டில் கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - நிதி மந்திரி கோரிக்கை


மத்திய பட்ஜெட்டில் கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - நிதி மந்திரி கோரிக்கை
x

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்,

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தநிலையில், கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபால் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

10-வது நிதிக்குழு காலத்தில் கேரளாவின் பங்காக 3.92 சதவீத நிதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய 15-வது நிதிக்குழு காலத்தில், கேரளாவின் பங்கு 1.92 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், கேரளா நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு எதிரான இந்த பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும்.

கேரளாவில் சமூக, உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும். கேரளாவின் 'சில்வர்லைன்' ரெயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலஅளவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story