மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல் வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்  வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

மைசூரு அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பாிதாபமாக உயிரிழந்தார்.

மைசூரு

மைசூரு (மாவட்டம்) தாலுகா தொட்டமாறகவுடன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி கவுடா (வயது32). அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் (35), குமார் (33). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியில் உள்ள அகல்யா தேவி கோவிலுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்கள் 3 பேரும் மைசூருவுக்கு வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் கூறுஹள்ளி அருகே உள்ள தொழிற்சாலை அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுவாமி கவுடா பரிதாபமாக இறந்தார்.

மஞ்சுநாத், குமார் ஆகிய 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story