விஷவாயு கசிந்து 5 பேர் பலி: முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்


விஷவாயு கசிந்து 5 பேர் பலி: முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்
x

மத்தியப்பிரதேசம் பாலக்காட்டில் உள்ள கிணற்றில் விஷவாயு கசிந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

போபால்,

மத்தியப்பிரதேசம் மாநிலம் பாலக்காட்டில் உள்ள கிணற்றில் விஷவாயு கசிந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பிர்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடான் கிராமத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்களில் பஞ்சாயத்தின் வேலைவாய்ப்பு உதவியாளரும் ஒருவராவார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிவாரணத் தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாலகாட் எரிவாயு கசிவு விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கு மத்தியப் பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிவராஜ் சிங் சவுகான், "பாலகாட் குடான் கிராமத்தில் உள்ள கிணற்றில் விஷவாயு கசிந்ததால் ஏற்பட்ட விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் அகால மரணமடைந்தது குறித்த சோகமான செய்தி கிடைத்தது.

இறந்தவர்களின் ஆன்மாக்கள் அவரது காலடியில் இடம் பெறவும், குடும்பத்தினருக்கு இந்த ஆழ்ந்த இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். பணிவான அஞ்சலி!" என்று தெரிவித்துள்ளார்.


Next Story