ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள், மகன்கள் நியமனம்


ரிலையன்ஸ்  நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள், மகன்கள் நியமனம்
x

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனம் எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரை பல்வேறு துறைகளில் முன்னணி வகித்து வருகிறது. இதன் தலைவராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். இவரது மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பொறுப்பு இஷா அம்பானிக்கும், எரிசக்தித் துறை பொறுப்பு ஆனந்த் அம்பானிக்கும் வழங்கப்பட்டது

இந்நிலையில், அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வந்த நீதா அம்பானி, அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தின் நிரந்தர அழைப்பாளராக அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story