பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு போலீசார் சம்மன்

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 12 Jun 2022 3:31 PM GMT (Updated: 12 Jun 2022 3:37 PM GMT)

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க நாளை (திங்கள்) விசாரணைக்கு ஆஜராகுமாறு மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

தானே,

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் பேசும் போது முகமது நபி குறித்து சர்ச்சை கருத்தை கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதேபோல முகமது நபி குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட டெல்லி பா.ஜனதா நிா்வாகி நவின்குமார் ஜின்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2 பேர் மீதும் ராசா அகடமி அளித்த புகாரின் பேரில் பிவண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க நாளை (திங்கள்) விசாரணைக்கு ஆஜராகுமாறு பிவண்டி போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இதேபோல வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக நவின்குமார் ஜின்டாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சீனியர் இன்ஸ்பெக்டர் சேத்தன் காகடே கூறினார். ஏற்கனவே முகமது நபி சர்ச்சை வழக்கு தொடர்பாக மும்பை, மும்ரா போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க நாளை (திங்கள்) விசாரணைக்கு ஆஜராகுமாறு மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

Next Story