மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,200 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,200 புள்ளிகள் சரிவு
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 1,210.62 புள்ளிகள் சரிவடைந்து 57,623.25 புள்ளிகளாக உள்ளது.



மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக குறைந்தது. தொடர்ந்து பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. இதனால், காலை 10.15 மணி நிலவரப்படி 1,210.62 புள்ளிகள் அல்லது 2.06% என்ற அளவில் சரிவடைந்த சென்செக்ஸ் குறியீடு 57,623.25 புள்ளிகளாக உள்ளது.

இதனால், சென்செக்ஸ் குறியீட்டுக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் சிவப்பு குறியீடு உடனேயே காணப்பட்டன. டெக் மகிந்திரா, இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜீஸ், டி.சி.எஸ்., பஜாஜ் பின்செர்வ் மற்றும் விப்ரோ ஆகியவை அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 361.50 புள்ளிகள் அல்லது 2.06% என்ற அளவில் சரிந்து 17,197.40 புள்ளிகளாக உள்ளது. இதன்படி, நிப்டியில் உள்ள அனைத்து நிறுவன பங்குகளும் சிவப்பு குறியீட்டுடனேயே காணப்பட்டன.


Next Story