பள்ளியில் லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கிய ஆசிரியை: அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவர்கள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!


பள்ளியில் லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கிய ஆசிரியை: அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவர்கள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
x

Image Credit:www.mid-day.com

தினத்தந்தி 18 Sep 2022 7:45 AM GMT (Updated: 18 Sep 2022 7:46 AM GMT)

மும்பையில் லிப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில், லிப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பள்ளி ஒன்றின் லிப்டில் சிக்கி 26 வயது ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு மும்பை புறநகர் பகுதியான மலாடில் உள்ள சிஞ்சோலி பண்டரில் செயல்பட்டு வரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது.

ஆசிரியை ஜெனல் பெர்னாண்டஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இரண்டாவது மாடியில் உள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக ஆறாவது மாடியில் லிப்ட் வரும் வரை காத்திருந்தார். லிப்டில் அவர் நுழைந்தவுடன் அதன் கதவுகள் அவருடன் சேர்த்து இறுக்கமாக மூடிக்கொண்டன.

லிப்டில் அவர் நுழைந்தவுடன், லிப்ட் திடீரென மேல்நோக்கி நகரத் தொடங்கியது, அப்போது அவரது ஒரு கால் லிப்டிற்குள்ளும் உடல் வெளியேயும் சிக்கிக்கொண்டது.பின் லிப்ட் நகர ஆரம்பித்தது, அவர் கதவுகளின் இடையே சிக்கிக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட உடனே பள்ளி ஊழியர்களும், குழந்தைகளும் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெர்னாண்டசை மீட்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின், அவர் வெளியே இழுக்கப்பட்டார். ஆனால் இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த ஆசிரியை உயிரிழந்தார். இந்த சம்பாம் குறித்து விசாரணை நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.லிப்ட் செயல்பாடுகளை பராமரிப்பு செய்யும் நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆசிரியை இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் அப்பள்ளியில் உதவி ஆசிரியையாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story