மும்பையில் நள்ளிரவில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!


மும்பையில் நள்ளிரவில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
x

பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சாலையில் நின்று கொண்டிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மும்பை,

மும்பை கண்டிவலி பகுதியில், பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் உள்ள கண்டிவாலி காவல் நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 12.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அப்பகுதியில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மும்பை போலீஸ் டிசிபி தாக்கூர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மொத்தம் 4 ரவுண்டுகள் சுட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்களுக்கும் அப்பகுதியில் கொல்லப்பட்ட நபருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் கூறினர்.


Next Story