முதியவரின் போனை கேம் விளையாடுவதற்காக வாங்கி அவரிடமிருந்து ரூ.22 லட்சம் பணத்தை தங்கள் கணக்குக்கு கைமாற்றிய இளைஞர்கள் கைது!


முதியவரின் போனை கேம் விளையாடுவதற்காக வாங்கி அவரிடமிருந்து ரூ.22 லட்சம் பணத்தை தங்கள் கணக்குக்கு கைமாற்றிய இளைஞர்கள் கைது!
x

ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.22 லட்சம் தொகை நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மும்பை,

மும்பையில் வசித்து வரும் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.22 லட்சம் தொகை நூதன முறையில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அந்த 68 வயது முதியவருக்கு தன் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விவரம் முதலில் தெரியவில்லை. சமீபத்தில், வங்கியில் பணம் எடுக்கச் சென்றபோது, அவரது கணக்கில் இருந்த ஓய்வூதியத் தொகை ரூ.20 லட்சம் உட்பட ரூ.22.35 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகரிகள் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முதியவர், போலீசில் புகார் அளித்தார். அப்போது தன் மொபைல் போனை அடிக்கடி இளைஞர்கள் இருவர் பயன்படுத்தியதை அந்த நபர் போலீசிடம் தெரிவித்தார்.

அதன்பின், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த முதியவரிடம் நட்புறவில் பழகி வந்த இரு இளைஞர்கள் ரூ.22 லட்சத்தை திருடியது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் மொபைலில் கேம் விளையாடுவதற்காக முதியவரின் மொபைல் போனைக் கடனாகப் பெற்றுள்ளனர்.

அப்போது அந்த முதியவரின் இளம் வயது நண்பர்கள் இருவரும், தங்களது கூகுள்-பே என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப் மூலம், முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை கைமாற்றியுள்ளனர்.

அந்த குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் கூறினர்.


Next Story