வாலிபர் வெட்டிக் கொலை


வாலிபர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொரப்பில் வாலிபர், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவமொக்கா:

சொரப்பில் வாலிபர், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாலிபர் கொலை

சிவமொக்கா மாவட்டம் ெசாரப் தாலுகா துடிநீர் கிராமத்தை சேர்ந்தவர் முகது கவுஸ். இவரது மகன் சலீம் (வயது 26). இவர் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், சலீமை வழமறித்து அவருடன் தகராறு செய்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக சலீமை வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சொரப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான சலீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சலீமை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? போன்ற எந்த விவரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து சொரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story