வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி


வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி
x

வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற அவரது கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கமகளூரு:

வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் கர்ப்பிணிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற அவரது கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வரதட்சணை கொடுமை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் அருகே ஆவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் சசிகலா (வயது 25) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் முடிந்தது. திருமணத்தின்போது சசிகலாவின் பெற்றோர் கார்த்திக்கிற்கு பணம், நகை மற்றும் பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

சசிகலா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், சசிகலாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் கார்த்திக், மாமியார் சீத்தம்மா, கணவரின் சகோதரர்கள் நஞ்சுண்டா, சரத் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

கொல்ல முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்கள் வரதட்சணை வாங்கி வரும்படி சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் வரதட்சணை வாங்கி வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கர்ப்பிணி என்று கூட பாராமல், சசிகலாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனை அறிந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சசிகலாவின் பெற்றோர், ஆல்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே கார்த்திக், அவரது தாய் சீத்தம்மா, சகோதரர்கள் நஞ்சுண்டா, சரத் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story