சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் - கவர்னர் தமிழிசை


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் - கவர்னர் தமிழிசை
x

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னைசூப்பர்கிங்ஸ் அணிக்கு புதுவை துணிநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அகமதாபாத் மைதானத்தில் மழைக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற சென்னை அணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கூகுள் சி.இ.ஓ.சுந்தர் பிச்சை, மும்பை அணி நிர்வாகம், கவுதம் கம்பீர் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அணி வெற்றிபெற்றதற்கு புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னிடைய டுவீட்டரில் கூறியுள்ளதாவது:

"2023 ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னைசூப்பர்கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வீரர்.மகேந்திர சிங் தோனி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6-ரன்கள் மற்றும் 4-ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர்.ரவீந்திர ஜடேஜா அவர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story