ஜம்மு-காஷ்மீர்: ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடித்தால் பரபரப்பு..!! - 2 பேர் காயம்


ஜம்மு-காஷ்மீர்: ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடித்தால் பரபரப்பு..!! - 2 பேர் காயம்
x

Image Courtacy: ANI

ஜம்மு-காஷ்மீரில் நின்று கொண்டிருந்த ஆளில்லா பேருந்து ஒன்றில் திடீரென நிகழ்ந்த குண்டு வெடிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர்,

உதம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டொமைல் சவுக்கில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில் இரவு 10.30 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் பஸ்சின் கண்டக்டர் மற்றும் உள்ளே அமர்ந்திருந்த மற்றொரு நபரும் லேசான காயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தில் காயமடைந்த கண்டக்டர் கூறும்போது, இரவு 7.70 மணியளவில், அடுத்த நாள் காலை ராம்நகருக்கு எடுத்துச் செல்வதற்காக, பேருந்தின் கூரையில் ஒரு மெத்தை மற்றும் மற்ற இரண்டு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதி கோரி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தன்னை அணுகியதாக போலீசாரிடம் தெரிவித்தார். பேருந்தில் பொருட்களை ஏற்றியவுடன், இருவரும் அந்த இடத்தை விட்டு சென்றனர், அதன் பிறகு சுமார் மூன்று மணி நேரத்திற்குள் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக உதம்பூர்-ரியாசி ரேஞ்ச் டிஐஜி சுலேமான் சவுத்ரி கூறுகையில், "இரவு 10.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.


Next Story