உத்தரகாசியில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3-ஆக பதிவு


உத்தரகாசியில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3-ஆக பதிவு
x

உத்தரகாசியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெஹ்ராடூன்,

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று காலை 5.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர்காசியில் பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.


Next Story