பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் - ராகுல் காந்தி பேச்சு


பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் - ராகுல் காந்தி பேச்சு
x
தினத்தந்தி 26 April 2024 5:31 PM IST (Updated: 26 April 2024 5:39 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் சிந்துவார் என்று ராகுல் காந்தி கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பிஜப்பூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

பிரதமர் மோடியின் பேச்சுகளை சில நாட்களாக பார்க்கிறீர்கள்; அவர் பதற்றமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடி மேடையில் கண்ணீர் சிந்துவார். 24 மணி நேரமும் மக்களை திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் ஈடுபடுகிறார். முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு அவர் பீதி அடைந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பிரதமர் பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதே அளவு பணத்தை 22 பேருக்கு கொடுத்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தை சரிசெய்ய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். பிரதமர் மோடி சிலரை கோடீஸ்வரர்களாக்கினார்; ஆனால் காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Next Story